அண்டார்டிகாவில் மால்டா நாடு (Malta), அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை பல்வேறு பனிப்பாறைகள் கடலுடன் இணைக்கின்றன. அதில் பைன் ஐலண்ட் கிளேசியரும் (Pine Island Glacier) ஒன்று. கடந்த 25 ஆண்டுகளில் இந்த கிளேசியர் பருவநிலை மாறுபாடு மற்றும் வெப்பமடைதல் காரணமாக உடைந்து பெருமளவிலான பனிப் பாளங்களை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த பனிப்பாறையில் இரண்டு பிளவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பைன் லாண்ட் கிளேசியர் (பனிப்பாறை) உடைவது மற்றும் சிறு துண்டுகளாக சிதைவது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது சாட்டிலைட் மூலமான ராடார் படங்களைக் கொண்டு பனிப்பாறை எவ்வாறு உடைகிறது என அனிமேஷன் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Fantastic animation showing the cyclic pattern of calving on #PineIslandGlacier over the past few years. It's almost as if Pine Island is putting on a show to win back some of the limelight stolen recently by its noisy neighbour @ThwaitesGlacier. https://t.co/pFnyJ8SHWc
— Rob Larter (@rdlarter) February 12, 2020