அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, கட்சியில் இதற்க்குமுன்பு எத்தனையோ அசம்பாவிதமான சம்பவங்கள், தவறான நடவடிக்கைகளும் நடந்துவிட்டது. இனிமேல் நடப்பது நன்றாக நடக்க வேண்டும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறார்கள். ஒட்டுமொத்த அண்ணா திமுக அம்மா காலத்தில் எப்படி இருந்ததோ, அதே அண்ணா திமுக மீண்டும் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே இதுபோல் பிளவு பட்டதனால் தான் ஒரு முறை திமுக ஆட்சியில் வந்து விட்டது, இப்போ அதே போல் தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதனால் இது போல் சம்பவங்கள் இனிமேல் நிகழக் கூடாது, எப்பவுமே அண்ணா திமுக ஒன்றாக இருந்தால், நம்மை வெல்வதற்கு யாருமே கிடையாது. அதனால் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அழைப்பை மறுத்திருக்கிறார். ஓபிஎஸ்ஸை பார்த்து அடிக்கடி அழைப்பு விடுப்பார், தர்மயுத்தம் நடத்துவார், பதவி இல்லாமல் இருக்க மாட்டார் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். பதவி இல்லாமல் இருக்கக் கூடாது என சொல்வதை ஆதாரபூர்வமாக ஒருவாட்டி நிரூபியுங்கள். பதவி இல்லாமல் இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் ஓபிஎஸ்ஸை தர்மயுத்ததை கைவிட்டுட்டு வர சொன்னார் எடப்பாடி பழனிசாமி.
அன்று தன்னுடைய முதல்வர் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காக தான் எடப்பாடி பழனிசாமி அன்றைக்கு ஓபிஎஸ்சை அழைத்து ஒன்று சேர்த்தார். இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்யை பார்த்து பதவி இல்லாமல் இருக்க மாட்டார் என்று சொல்கிறார். பதவி இல்லாமல் இருக்க மாட்டார் என்றால் அன்றைக்கே சொல்லி இருப்பார்.
துணை முதல்வர் கூட ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை, எடப்பாடி தான், நீங்கள் துணை முதல்வர் பொறுப்பை வைத்துக்கொள்ளுங்கள். அப்படினால் தான் நாம் சேருவதற்கு அர்த்தம் என்று சொன்னதால் தான் ஓபிஎஸ் ஒத்துக்கொண்டார்.ஓபிஎஸ் அன்றைக்கே பதவி கேட்கவில்லை. எனவே ஓபிஎஸ் பதவி இல்லாமல் இருக்க மாட்டாரு என எடப்பாடி பழனிச்சாமி கூறியது தவறு என தெரிவித்தார்.