அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பேட்டியை வைத்து சொல்கிறேன். ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார் அண்ணா திமுக ஒன்றாக இணைய வேண்டும், ஒட்டுமொத்தமாக இருக்க வேண்டும், ஆரம்ப காலத்தில் அம்மா இருந்தபோது கட்சி எப்படி இருந்ததோ அதேபோல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
அது யாருக்கு நல்லது ? ஒட்டுமொத்தமாக கட்சி இருப்பது கட்சிக்கு யாருக்கு நல்லது ? அதே எடப்பாடி கூறி இருக்கிறார், கட்சி ஒன்றாக இணைய கூடாது என்று சொல்கிறார், அது யாருக்கு நல்லது ? திமுகவிற்கு நல்லது. இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். யார் உண்மையான அண்ணா திமுக ? யாருடைய அறிக்கை உண்மையானது ? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
அண்ணா திமுக ஒன்றாக இருந்தால் நமக்கு தான் லாபம், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம். அண்ணா திமுக பிளவு பட்டால் திமுகவிற்கு லாபம், நாம் தோர்த்து விடுவோம். அதனால் எடப்பாடி என்ன சொல்கிறார் ? பிளவுபட்டு தான் இருக்க வேண்டும், ஒன்று சேரக்கூடாது என்று சொல்கிறார்.
அவருடைய ஒரே நோக்கம், தான் மட்டும் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும், தான் மட்டும் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும், மற்ற யாரும் இருக்கக்கூடாது, தனக்கு சமமாகவும் வரக்கூடாது, அடுத்த வரிசையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அண்ணா திமுக இந்த நிலைமைக்கு வந்த காரணமே எடப்பாடி பழனிச்சாமி தான், அவருடைய பதவி ஆசை, பணத்தாசையினால் இந்த கட்சி இந்த அளவிற்கு சென்று விட்டது என வேதனையை தெரிவித்தார்.