Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் ஆட்களை வீழ்த்திய ஈபிஎஸ் …! நழுவி ஓடிய செங்கோட்டையன்.. ஓகே சொல்லி CMஆன எடப்பாடி.. வெளியே வரும் பரபரப்பு உண்மைகள்..!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இன்னொரு வார்த்தையும் சொல்லியிருக்கிறார், ஓபிஎஸ்ஸால் தான்  கட்சி தோற்றுவிட்டது என்று ? … அதாவது சில பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது.

எடப்பாடி அவருக்கு வேண்டிய நபர்களை ஜெயிக்க வைத்தார், ஓபிஎஸ்-க்கு வேண்டிய ஆட்களை எல்லாம் தோற்க வைத்தார், இதுதான் நடந்தது.இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அம்மா இறந்த பிறகு தலைவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். எதற்காக நடத்தினார் ? தன்னை முதலமைச்சராக இருந்ததை காலி செய்துவிட்டு,  சின்னம்மா வர வேண்டும் என்று சொன்னார்கள், இவர் ஒதுங்கி விட்டார்.

ஆனால் சின்னம்மாவிற்கு அன்றைக்கு சூழ்நிலை இல்லை, முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இல்லை, அதனால் எல்லோரும் சேர்ந்து எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு கூவத்தூரில் கலந்து ஆலோசித்து, முதலில் செங்கோட்டையன் என்று சொன்னார்கள். ஆனால் அவர் என்னால் முடியாது. அவர்களுடைய தேவையை  என்னால் நிவர்த்தி செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

அதற்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிச்சாமி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார், அவர் சொன்ன உடனே அவரே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.அதன்பிறகு அவர் காலில் ஊர்ந்து, காலில் பிடித்து முதலமைச்சரானார், அது பதவி ஆசையினால் தானே அவர் அப்படி செய்தார். அன்றைக்கு ஓபிஎஸ் நினைத்து இருந்தால், பதவி ஆசை இருந்திருந்தால் அன்றைக்கே ஒன்று சேர்ந்து முதலமைச்சர் பதவி வாங்கி இருக்க முடியுமே.

அதிமுகவின் சட்டதிட்டபடி தலைவர் ஆரம்பித்த கட்சியில்,  அவர் போட்ட சட்டமே  பொது உறுப்பினர்கள் சேர்ந்து தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ணா திமுகவினுடைய அலுவலகத்தை கோவிலாக வைத்திருக்கிறோம், அந்த கோவிலில் இவர் தகராறு செய்து விட்டார் என்று எடப்பாடி கூறுகிறார்கள் என விமர்சித்தார்.

Categories

Tech |