தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (24-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்:
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர் உப மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடக்கிறது. ஆகையால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம், ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.
நாமக்கல் மாவட்டம்:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.
ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று நாமக்கல் செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.