Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்ககளே…. இன்று காலை 10 மணிக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |