Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சொன்னாரு என்பதை நிரூபிக்கலைனா…. நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்.. பிரஸ்மீட்டில் அண்ணாமலை ஆவேசம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி அப்படி சொன்னார் என்பதை நீங்கள் ஆதாரப்பூர்வமாக காட்ட வேண்டும். இல்லை என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் என்னுடைய சேம்பரில் உட்கார்ந்து இருக்கின்றேன். பிரதமர் மோடி பேசியதாக வந்த வீடியோ உண்மை என்றால்,  அடுத்த பிரஸ்மீட்டில் நான் காரணம் சொல்கின்றேன். அடுத்த பிரஸ் மீட்டில் நீங்கள் என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும்.

எத்தனை நாளைக்கு இதே பொய்யை தமிழ்நாட்டில திரும்பத் திரும்ப சொல்றீங்க. மோடி அவர்கள் கொடுத்தது எதுவுமே இலவசம் கிடையாது. மோடி கொடுத்த வீடு,  கேஸ் அடுப்பு எதுவுமே இலவசம் கிடையாது. அது மக்களுக்கு அவருடைய உரிமையாக,  இந்த அரசினுடைய கடமையாக கொடுத்திருக்கின்றார்.

பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே மக்களுக்கு அடிப்படை உரிமையாக வருவதை எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி தடுக்காது. இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் இலவசம் மின்சாரம் மட்டுமல்ல.  விவசாயத்திற்கு இலவசமாக முன்னுமை மின்சாரம், 24மணி நேரம் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றது.

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இபி டிபார்ட்மென்ட் போடற டிராமா மாறி கிடையாது. தமிழகம் தான் ஸ்டேட்டஸ் ஆப் எஜுகேஷன் கீழே இருக்கோம். அதை யாருமே மறுக்க முடியாது. டேட்டா ரொம்ப தெளிவா இருக்கு. அதை நீங்க மேம்படுத்தி,  கல்வி இலவசமா குடுங்க,  குவாலிட்டி கல்வி  இலவசமா கொடுங்க அதை ஏற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |