Categories
தேசிய செய்திகள்

மக்களே…. வெறும் 750 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்….. எப்படி தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!

இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே மக்கள் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் விதமாக அரசு சிறப்பு வசதி தொடங்கி வருகிறது. டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 1053 ரூபாயாக உள்ளது. அதுவே சென்னையில் 1,068.50 ரூபாயாக விற்பனையாகிறது.

இந்நிலையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 750 ரூபாய்க்கு சிலிண்டரை தருகிறது. இதன் பெயர் காம்போசிட் சிலிண்டர். இதன் எடை 10 கிலோ மட்டுமே. சென்னையில் இதன் விலை 761 ரூபாய். மேலும் இந்த சிலிண்டரில் எவ்வளவு கேஸ் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது 28க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சிலிண்டர் கிடைக்கின்றது.

காம்போசிட் சிலிண்டரின் விலை!

டெல்லி – ரூ.750

மும்பை – ரூ.750
கொல்கத்தா – ரூ.765
சென்னை – ரூ.761
லக்னோ – ரூ.777

14.2 கிலோ சிலிண்டரின் விலை!

டெல்லி – ரூ.1053
மும்பை – ரூ.1052.50
சென்னை – ரூ.1068.50
கொல்கத்தா – ரூ.1079
லக்னோ – ரூ.1090.50

Categories

Tech |