தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நாளை அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது.
ஆனால் தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொறியியல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.