செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எல்லாம் நம்பி, தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு திமுக ஆட்சியை ஆதரிதாரிகள். ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற விதமாகத்தான் திமுக ஆட்சி செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கான பலனை அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனுபவிப்பார்கள்.
பாராளுமன்ற தேர்தல் என்பது இந்தியாவின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுக்கின்ற தேர்தல். அதுல ரெண்டே வாய்ப்பு தான் இருக்கு. ஒன்னு பிஜேபி, இன்னொன்னு காங்கிரஸ். அதனால 2023 கடைசில ஒரு முடிவுக்கு வருவோம், நிச்சயம் நல்ல முடிவு எடுப்போம் என தெரிவித்தார்
பாஜகவுடன் நெருக்கமாக இருக்கீங்க? கூட்டணி அமைப்பீங்களா ? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, யாரோடும் எங்களுக்கு அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு கிடையாது. பழனிச்சாமி அவர்களிடம் கூட எனக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு எல்லாம் கிடையாது.
அவருடைய குணாதிசயத்தை தான் நான் திரும்பத் திரும்ப கண்டிக்கிறேனே தவிர மற்றபடி தனிப்பட்ட விரோதம் நான் யாரிடம் வைத்திருந்தது கிடையாது, எந்த கட்சியோடும் கிடையாது. இது ஒரு அரசியல் இயக்கம், தமிழ்நாட்டு மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். அதனால் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைப்போம் என தெரிவித்தார்.