செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாதான் அன்னைக்கே பன்னீர்செல்வம் சொன்ன கருத்தை வரவேற்பதாக சொல்லி உள்ளேன். அதே நேரத்தில் சில மேதாவிகள் அவங்க சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் ஓபிஎஸ்ஸின் நல்ல முடிவிற்கு ஒத்து வர மாட்டார்கள் அப்படிங்கறதையும் நான் அன்னைக்கே சொன்னேன்.
திரு.பன்னீர்செல்வம், திரு.வைத்தியலிங்கம் அவர்களின் கருத்தை நான் வரவேற்கின்றேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான், இந்த தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற ஒரு உயரிய நோக்கத்தோடு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், அவர்களுடைய கருத்தை நான் வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் இன்னும் சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான் ஓபிஎஸ் எண்ணம் நிறைவேறும் என்பதை தான் நான் திரும்பத் திரும்ப சொல்கின்றேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் ஒரு அணிலை போல செயல்படுவோம் என்று திரும்பத் திரும்ப சொல்கின்றேன் என தெரிவித்தார்.