கலாச்சார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலில் கடந்த 5 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த கலாசார நிகழ்ச்சியில் கடைசி நாள் விழா நேற்று முன்தினம் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் இப்ராகிம் ஹமிதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது இரவு 9.40 மணியளவில் விழா நடைபெறும் பூங்காவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பை இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பூங்காவிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பையை பரிசோதித்துள்ளனர். அப்பொழுது அந்த பையில் வெடிகுண்டு இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து அப்பகுதியிலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைக்கப்பட்டு குண்டு இருந்த பை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர் அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. கலாசார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட பையை வைத்து சென்றது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.