Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING: 18மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தமிழக மக்களே உஷாரா இருங்க..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் காரைக்காலிலும் இன்று ஒரு சில இடங்களில் கன மழை,  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று குறிப்பாக 18 மாவட்டங்கள் வரை அதிகமாக கனமழை இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் அதேபோல் திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மேலும் புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் இன்று கனமழை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த மூன்று நாட்களுக்கும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிலும் ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு  கனமழை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை,  மாலை நேரத்தில் மிதமான மழை இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக திருவாரூர் மாவட்டம் நீலமங்கலம் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் நாமக்கல், வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 செண்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |