இந்த விதிகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த மாற்றம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறைப்படி கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் கார்டை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் ஓடிபி மூலம் ஒப்புதல் பெற வேண்டும்.
ஒப்புதல் கிடைக்காவிட்டால் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஏழு நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கு முடக்கப்பட வேண்டும் . கிரெடிட் கார்டு லிமிட்டை வாடிக்கையாளர்கள் ஒப்புதல் இன்றி மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.