Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், தஞ்சை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தூத்துக்குடி,  உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |