Categories
மாநில செய்திகள்

breaking: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ..!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய உயர்வு வழங்குவது என  ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து அரசு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம்.  குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. ஏறக்குறைய 2019ல் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த சூழலில் தற்போது 2022-ல் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த தொடர்பான ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையின் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டில் இருக்கக்கூடிய போக்குவரத்து பயிற்சி பள்ளி நடைபெற்றது.

காலையில் 12.30 மணிக்கு அமைச்சர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக சிஐடியு,  ஏஐடியுசி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால், 14வது ஊதியா உயர்வு  ஒப்பந்தத்தை பொறுத்தவரை பே மேட்ரிக்ஸ் முறையை அமைச்சர் கொடுப்பதாக சொல்லிட்டாரு. அதே நேரத்தில் ஐந்து சதவீத ஊதிய உயர்வு கொடுக்கவும் சொல்லிவிட்டார்.

பே மேட்ரிக்ஸ் முறையை அனைத்து தொழிற்சங்கமும் வரவேற்றபோதும், சிஐடியு,  ஏஐடியுசு தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.ஏனெற்றால் பே மேட்ரிக்ஸ் முறையில்,  மத்திய அரசினுடைய சட்ட விதிகள் படி நான்காண்டுக்கு ஒருமுறைதான் இந்த ஊதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சிஐடியு,  ஏஐடியுசு சொல்லும்போது எப்பவும் போல இருக்க கூடிய மூன்றாண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடுங்க. மத்திய அரசிடம் விலக்கு கேட்க வலியுறுத்தி வெளிநடப்பு செய்துள்ளது.

Categories

Tech |