Categories
மாநில செய்திகள்

“பா.ஜ.க பணத்திற்கு விலை போய்விட்டது”…. மைதிலி வினோ பரபரப்பு பேச்சு….!!!!!

கோவை இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மைதிலி வினோ. இவர் பா.ஜ.க-வில் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்துவந்தார். இன்று அந்த கட்சியின் கோவை மாவட்ட தலைவர் உத்தமராமசாமி கட்சி அடிப்படை பொறுப்பிலிருந்து மைதிலி வினோவை நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து மைதிலி வினோ செய்தியாளர்களிடம் பேசியதாவது “1999ம் வருடம் பா.ஜ.க-வில் இணைந்து இந்த கட்சியில் மகளிர் அணி இல்லாத காலக்கட்டத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். தாமரை சின்னம் என்னவென்றே தெரியாத போது மக்களிடம் கொண்டு சென்றவள் நான். இப்போதைய பா.ஜ.க பணத்திற்கு விலை போய் விட்டது.

பா.ஜ.க-வில் பணிசெய்து முன்னேறி விடுவோம் என அன்றைய கோட்பாடு இருந்தது. தற்போது 300 கோடி அளவில் பணம் இருந்தால் மாவட்ட தலைவர் ஆகிவிடலாம் என்ற கோட்பாடு வந்துள்ளது. இருநாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க சென்றேன். இந்நிலையில் அங்கு எடுத்த புகைப்படத்தை வைத்து பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் பா.ஜ.க கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். அமைச்சரை பார்த்ததால் கட்சியிலிருந்து நீக்கினால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்சி ரீதியாக கட்டபஞ்சாயத்து போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டது போல் கூறுகிறார்கள்.

இதற்கு மாவட்ட தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும். நான் ஒவ்வொரு களபணிகள் செய்து தான் பா.ஜ.க-வில் பதவி வாங்கினேன். ஆனால் இப்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பதவி கிடைக்கிறது. என்னை போல் அதிக நபர்கள் பா.ஜ.க-வில் கஷ்டப்பட்டிருக்கின்றனர். பா.ஜ.க-வில் பழைய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும் அசிங்கபடுத்தாமல் இருக்கலாம். பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து வெளியில் வர வாய்புள்ளது.

ஆகவே கொள்கைக்காக இருந்த கட்சி இப்போது பணத்திற்காகக விலை போய்விட்டது. மாநில பொறுப்பு வேண்டுமெனில் மாதம் 50 ஆயிரம், மாவட்ட பொறுப்புக்கு 10 ஆயிரம், மண்டல பொறுப்பிற்கு 5 ஆயிரம் என மாதந்தோறும் செலவுசெய்ய வேண்டும். அண்ணாமலையின் வேகத்துக்கு புது ஆட்களும் தேவை. அதேபோன்று  அனுபமும் தேவை. இதற்கு முன் தி.மு.க.வுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இப்போது நான் தி.மு.க.வுக்கு செல்கிறேன் என கூறியதும் கட்சிக்கு களங்கம் என்கிறார்கள். நாளை முதல்வரை சந்தித்து தி.மு.க.வில் இணைவேன். இனிமேல் நான் தி.மு.க-வில் மட்டும்தான் இருப்பேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |