கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக தரப்பில் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் காலை கலந்து கொண்டார். இன்று மாலை கட்சி சார்பாக கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் திமுகவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைவதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக அவர்கள் தரப்பு ஆதரவாளர்கள், நாங்கள் கட்சி சார்ந்த கருத்துக்கள் ஏதும் பேசப்போவதில்லை. மேலும் எங்கள் தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி கொடுக்க தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக அவர்களின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் கூட மறைமுகமாக அவர்கள் இன்று மாலை சரியாக 5 மணி அளவில் திமுக கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கிணத்துக்கடவு, வால்பாறை எம்எல்ஏக்கள் 2பேர் தான் திமுகவில் இணைவதாக தகவல் கசிந்துள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வரக்கூடிய இந்த சூழலில், இந்நிகழ்வு அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும், அதே போல பொதுச் செயலாளர் பதவிகளுக்கும் பல்வேறு பிரச்சனைகளானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
இந்த சூழலில் அதிமுகவில் யார் பக்கம் இருப்பது என்று தொண்டர்கள் தெரியாமல் திணறி வரக்கூடிய சூழலில், தற்பொழுது அதிமுகவில் அதிருப்தியில் இருக்கக்கூடியவர்கள் திமுக பக்கம் நகர்வதாக சொல்லப்படுகின்றது. ஒருவேளை இந்த நிகழ்வு உறுதியாகும் பட்சத்தில் அதிமுகவுக்கு உள்ளே மிகப்பெரிய அதிர்வலை ஏற்படும். அதிகார மோதலில் கட்சி சீரழிவதாக அடிமட்ட தொண்டர்கள் தலைமையை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
https://www.seithisolai.com/aiadmk-mlas-in-dmk-confusion-in-kongu-zone.php
இதையும் படிங்க:
https://www.seithisolai.com/breaking-aiadmk-mla-meets-pm.php