Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சர்ப்ரைஸ் அளிக்கும் தமிழக அரசு….!!!!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தலின் போது மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அறிவிப்பினை திமுக, அதிமுக போன்ற இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டபடி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்து 2011 ஆம் வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் தொடங்கி வைத்தது. அதன்படி தமிழக அரசு சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்து 2011 ஆம் வருட முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலமாக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த சூழலில் கொரோனா பொதுமடக்கம் காரணமாக லேப்டாப் உற்பத்திக்கு மிக முக்கிய தேவையாக விளங்கும் சிபியூ உற்பத்தி நிறுத்தப்பட்டதால் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து இலவச லேப்டாப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதன் எதிரொலியாக கடந்த 2019 ஆம் வருடம் முதல் மூன்று வருடங்களாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படாமல் இருந்ததனால் மாணவர்கள் கவலை அடைந்து இருக்கின்றார்கள்.

அதனால் இந்த கல்வி ஆண்டில் ஆவது ஏற்கனவே வழங்காமல் நிலுவையில் இருக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து லேப்டாப்புகள் வழங்கப்படுமா இன்னும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்குவதற்கு பதிலாக டேப்லெட் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இலவச லேப்டாப் ஒன்றிற்கு 15 ஆயிரம் வரை செலவாகலாம் எனும் பட்சத்தில் அதே டேப்லெட் என்றால் 7000த்திலேயே முடித்துக் கொள்ளும். இதன் மூலமாக ஒரு மாணவரின் மூலம் பாதிக்கு பாதி மிச்சம் ஆகின்றது. இதன் காரணமாகவே டேப்லெட் வழங்கும் திட்டத்தை கையில் எடுக்கும் முடிவிற்கு தமிழக அரசு வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |