Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாகியும்… பல மடங்கு ஆபத்து… நீடிக்கும் மெக்சிகோ எண்ணெய் கசிவு..!!

மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட  ஆழ்கடல் எண்ணெய் கசிவு, நிபுணர்கள் கூறியதை விட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக இப்போதும் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்கடல் எண்ணெய் கசிவு (Deepwater Horizon) ஏற்பட்டது. அமெரிக்காவின் எண்ணெய் கிணறு வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு அத்தியாயமாக இந்த கசிவு பார்க்கப்படுகின்றது.

Image result for deepwater horizon gulf of mexico

ஆம், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திற்காக டிரான்ஸ்ஓசியன் லிமிட்டட் (Transocean Ltd) ஆழ்கடல் எண்ணெய் கிணறு திட்டத்தை மேற்கொண்ட போது, விபத்து ஏற்பட்டு 11 பணியாளர்கள் கொல்லப்பட்டது, மட்டுமில்லாமல் சுமார் 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணைய் கடல் முழுவதும் பரவியது. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டாகிவிட்டது.

Image result for deepwater horizon gulf of mexico

இந்த நிலையில் தற்போது மியாமி பல்கலைக்கழக கடலாராய்ச்சி பேராசிரியர் கிளேரி பாரிஸ் லிமோஸி ஆய்வு நடத்தி, எண்ணெய் கசிவு முன்பு கணக்கிடப்பட்டதையும் விட 30 சதவிகிதம் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

Image result for deepwater horizon gulf of mexico

சாட்டிலைட் படங்களை மட்டும் வைத்து கணக்கிடப்பட்டதை நம்பாமல் கடல் நீரை ஆய்வு செய்து இதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலமடங்கு ஆபத்தான ஒன்றாக இப்போதும் நீடித்து கொண்டிருப்பதாக பிரபல விஞ்ஞான பத்திரிகையான Science Advances journal ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |