சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. இந்த 2 அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் என்றாலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் கடைசி 5 தொடர்களில் மோதிய போட்டிகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
இலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெற்றது. இந்த போட்டியில் 4-வது சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷோயத் அக்தர் ஆகியோருக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை நடுவர் உடனடியாக தடுத்து நிறுத்தினார். இந்த வாக்குவாதத்தினால் கடும் கோபத்தில் இருந்த ஹர்பஜன்சிங் பேட்டிங்கில் களம் இறங்கினார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் களம் இறங்கிய ஹர்பஜன்சிங் ஒரு அபாரமான சிக்சரை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கில் களம் இறங்கிய பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் சச்சின் 48 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 200 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்தியாவால் இலக்கை அடைய முடியும். இந்த போட்டியில் சச்சின் ஆட்டம் இழந்து வெளியேறியதால் விராட் கோலி களமிறங்கினார். இந்த மேட்ச் விராட் கோலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். அந்த அளவுக்கு விராட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 142 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை எடுத்து 183 ரன்கள் குவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினரும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த மேட்சில் ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அரை சதம் அடித்தனார். இதனால் இந்தியாவுக்கு 245 ரன்கள் குவிந்தது. இந்த மேட்ச்சில் பாகிஸ்தான் 17 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. இந்த தொடரில் அஸ்வின் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடினாலும், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 12 பந்துகளில் 34 ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து பறித்து வெற்றியை தட்டி சென்றார். இதனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் 5-வது வெற்றியை பெற்றது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் இந்தியாவுக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இவர் 120 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு பெரும் சவால் கொடுத்தார். இவரின் அபாரமான பந்து வீச்சினால் பாகிஸ்தான் கோப்பையை தட்டி சென்றது. கடந்த 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தான் அணியினருக்கும் இடையே நடைபெற்ற 4 போட்டிகளில் குழு ஆட்டத்தில் இந்தியா 163 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்திலும், மற்ற 4 போட்டிகளில் 238 ரன்களில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.