தமிழில் சசி குமாருடன் பிரம்மன், சந்தீப் கிஷனுடன் மாயவன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. அத்துடன் இவர் தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சில நாட்களாக பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும், லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதில் வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன் ஆவார். வருணும், லாவண்யாவும் மிஸ்டர், அந்தரிஷம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் காதல் கிசு கிசுவுக்கு லாவண்யா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது ”நானும் வருண் தேஜும் காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை. அது முற்றிலும் வதந்தி ஆகும். வருண்தேஜுடன் இணைந்து 2 திரைப்படங்களில் நான் நடித்து இருப்பதால் எங்களுக்குள் காதல் என்ற வதந்தியை பரப்பி இருக்கின்றனர். யாரையும் நான் காதலிக்கவில்லை” என்று கூறினார்.