ஆப்கானிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியானதாகவும் 100க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக சுமார் 10 மாகாணங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலும், பல தோட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் அவை முழுவதுமாக அழிந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் குழந்தைகளையும் பெண்களையும் தங்க வைக்க தகுந்த வசதி இல்லை. மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் இனிமேல் வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.