Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 14.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

14-02-2020, மாசி 02, வெள்ளிக்கிழமை,

சஷ்டி மாலை 06.21 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

சித்திரை நட்சத்திரம் காலை 07.27 வரை பின்பு சுவாதி பின்இரவு 06.01 வரை பின்பு விசாகம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.

சஷ்டி.

லஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

மேஷம்

இன்று பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். வியாபாரம் தொடங்கும் முயற்சியில் குடும்பத்தாரின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நவீன கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

இன்று பணியில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பெற்றோரிடம் நற்பெயரை வாங்குவீர்கள். பொருளாதாரம் சிறந்த முறையில் இருப்பதால் கடன்கள் அகலும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

மிதுனம்

இன்று செய்யும் அனைத்து செயலிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் இன்று கிடைக்கும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும். சிலருக்கு அரசு சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கப் பெறும்.

கடகம்

இன்று உடல் நலம் சிறந்த முறையில் இருக்கும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாகவே இருக்கும். நண்பர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மன அமைதியைக் கொடுக்கும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

இன்று மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய செய்திகள் வீடு தேடி வரும். உங்கள் பிரச்சனைகளில் உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சிறந்த அளவில் இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி 

இன்று இல்லத்தில் பெரியவர்களிடம் சிறிய கருத்து வேற்றுமை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். பணியில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். வெளியூர் பயணம் செல்வதால் நல்ல பலன் கிடைக்கும். இன்று முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம்

இன்று இல்லத்தில் பணவரவு போதுமானதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நன்மை நடக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் வெளியூர் பயணத்தினால் நட்பு வட்டம் விரிவடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணியில் இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகள் அகலும். வயதில் மூத்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று வியாபாரம் தொடர்பான வெளியூர் செல்ல வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு சுறுசுறுப்பின்மையும் காணப்படும். உத்தியோகஸ்தர்கள் முன் கோபத்தினால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.  விட்டுக் கொடுப்பதால் நன்மை ஏற்படும். நண்பர்களால் நன்மை நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கப்பெறும்.

தனுசு 

இன்று இல்லத்தில் ஒற்றுமை கூடும். பொருளாதார நிலை சிறந்த முறையில் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். புதிய பங்குதாரர்களின் சேர்க்கையால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணியில் உடனிருப்பவர்கள் உங்களுடன் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

மகரம்

இன்று இல்லத்தில் தனவரவு அதிகரிக்கும். மகன் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை இன்று கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல வாய்ப்புகள் இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்

இன்று இல்லத்தில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணத்தினால் நன்மை நடக்கும். கடன் பிரச்சனை குறையும்.

மீனம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் தோன்றி அகலும். தொழில் தொடர்பான கொடுக்கல்-வாங்கலில் நிதானத்துடன் செயல்படுவது நன்மை கொடுக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |