Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நண்பர் வீட்டில் குத்துவிளக்கு திருடிய இரண்டு பேர்”… கைது செய்த போலீசார்….!!!!!!

கருங்கல் அருகே நண்பர் வீட்டில் குத்துவிளக்கு திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே இருக்கும் மாங்கரை கோட்டைவிளையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டிலிருந்த ஏழரை கிலோ எடை இருக்கும் வெண்கல குத்து விளக்கு மாயமானது. இதை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் கருங்கல் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் மரிய செல்வின் மற்றும் மரிய சேவியர் என்பது தெரிய வந்தது. இவர் விஜயகுமாரின் நண்பராவார். மேலும் இவர்தான் விஜயகுமாரி வீட்டில் குத்து விளக்கு திருடியதும் சென்ற சென்ற மாதம் 9-ம் தேதி கருங்கல் அருகே திருஞானபுரம் சிறுவர் பூங்காவில் நின்ற சந்தன மரத்தை வெட்டியதும் தெரிந்தது. இதனால் போலீசார் இருவரையும் கைது செய்தார்கள்.

Categories

Tech |