Categories
கிரிக்கெட் விளையாட்டு

உடல்தகுதியை நிரூபிப்பாரா இஷாந்த் ஷர்மா? – எதிர்நோக்கும் இந்திய டீம்

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இஷாந்த் ஷர்மா, அவருடைய உடல்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில் ஆடியபோது இஷாந்த் ஷர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனை ஸ்கேன் செய்தபோது, காயம் தீவிரமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக காயத்திலிருந்து மீண்டுள்ள இஷாந்த் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் நியூசிலாந்து செல்வதற்கு முன்னதாக அவருடைய உடல்தகுதி தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இஷாந்த் ஷர்மா

இதற்காக வரும் பிப்.15ஆம் தேதி இஷாந்த் ஷர்மா அவருடைய உடல்தகுதியை நிரூபிக்கவேண்டும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடல்தகுதித் தேர்வில் இஷாந்த் ஷர்மா தோல்வியடைந்தால், நியூசிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது.

அந்நிய மண்ணில் இஷாந்த் ஷர்மா இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராவார். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் இவரின் உயரமும் வேகமும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். அதனால் இஷாந்த் ஷர்மாவின் உடல்தகுதி முடிவினை இந்திய அணியும் ரசிகர்களும் எதிர்நோக்கியுள்ளனர்

Categories

Tech |