சிறுமியை இன்ஸ்டாகிராமில் காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 19 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த அந்த வாலிபர் சிறுமியை சந்தித்து பேசியதுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.