ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து விட்ட நிலையில், சில நட்சத்திர வீரர்களான பும்ரா, ஷஹீன் அப்ரிடி உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான, இந்திய தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல மாட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது..
ராகுல் டிராவிட் 10 நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் யாரேனும் நியமிக்கப்படலாம் என்று கேள்வியும் இருந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து ராகுல் டிராவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியவில்லை என்றால் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியுடன் இடைக்கால பயிற்சியாளராக பயணம் செய்த வி.வி.எஸ் லட்சுமண் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 2022 ஆசிய கோப்பைக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஏசிசி ஆசியக் கோப்பை 2022க்கான இந்திய அணியின் (சீனியர் ஆண்கள்) இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக என்சிஏவின் தலைவரான திரு வி.வி.எஸ் லட்சுமண் இருப்பார்.
ஜிம்பாப்வேயில் ODI தொடரில் விளையாடிய இந்திய அணியுடன் பயணித்த திரு லக்ஷ்மன், UAE க்கு அணி புறப்படுவதற்கு முன்பு கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்த திரு ராகுல் டிராவிட் இல்லாத நிலையில் அணியின் பயிற்சியாளராக இருப்பார். BCCI மருத்துவக் குழுவினால் சோதனையில் நெகட்டிவ் எனச் சோதனை செய்யப்பட்டவுடன் டிராவிட் அணியில் சேருவார்.
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சியாளராக சென்றிருந்த வி.வி.எஸ் லட்சுமண் மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல், தீபக் ஹூடா, அவேஷ் கான் ஆகியோர் ஹராரேயில் இருந்து துபாய்க்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS – VVS Laxman named interim Head Coach for Asia Cup 2022.
More details here 👇👇https://t.co/K4TMnLnbch #AsiaCup #TeamIndia
— BCCI (@BCCI) August 24, 2022