விஜய்யின் வாரிசு திரைப்படம் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் ரவிச்சந்திரன் கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பானது சென்னையில் நடந்து வந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் விஜய் விசாகபட்டினத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் ரவிச்சந்திரனை இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருக்கின்றார்கள். இதனால் ரொம்ப மகிழ்ச்சியாக ஷூட்டிங்க்கு சென்றார் ரவிச்சந்திரன். ஆனால் அவரைப் பார்த்த வம்சி இவர் லுக் ரொம்ப ரிச்சாக இருக்கிறது என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம். பின் ரவிச்சந்திரனை கேரவனில் அமர வைத்திருக்கின்றார்கள்.
இதன்பின் விஷயத்தை அவரிடம் சொன்னது அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நடிக்க வைத்து உங்களின் நடிப்பு சரியில்லை என சொல்லி அனுப்பி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் லுக் ரிச்சாக இருக்கின்றது என கூறி அனுப்பியது தான் வேதனையாக இருக்கின்றது என கண்கலங்கியாதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார். பின் விஜய்யை சந்தித்து நடந்ததை சொல்லிவிட்டு தான் போவேன் என கூறிய ரவிச்சந்திரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்களாம். விஜய் திரைப்படம் என்று ஆசை, ஆசையாய் போய் ஏமாந்து வேதனைப்பட்டது தான் மிச்சம் என கூறுகின்றார் ரவிச்சந்திரன்.