தனுசு ராசி நேயர்களே..!
ஆன்று எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.
காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலனே கிடைக்கும். கடன் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதே போல் பண விவகாரங்களிலும் ரொம்ப கவனமாக இருங்கள். புதிய நிகழ்ச்சிகளில் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்.
மிக முக்கியமான பணியாக இருந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். கணவன்-மனைவி பொருத்தவரை எந்த வித பிரச்சினைகளும் இல்லை சுமுகமாகவே இருக்கும். அதேபோல் உறவினர்களின் தொல்லை இருக்கும். பணம் கேட்டு சிலர் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். இன்று காதலர்களுக்கு மிகவும் நட்பான நாளாக இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்ச் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்ச் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறம்.