Categories
உலக செய்திகள்

அதீத வெப்பத்தால் வறண்ட ஆற்றுப்படுகை…. 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்…. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் கால்தடம்….!!

டெக்சாஸ் மாகணத்தில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகணத்தில்  இந்தாண்டு அதிக அளவிலான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. டைனோசர் பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்டேட் பூங்கா வழியாக ஓடும் ஆறு வறண்டு பொய்யுள்ளது. அந்த ஆற்றில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த கால்தடங்கள் சுமார் 15 அடி உயரம் 7 டன் எடை கொண்ட டைனோசர் இனத்தை சேர்ந்தாகவோ அல்லது 60 அடி உயரம் மற்றும் 44 டன் எடைகொண்ட டைனோசர் இனமாகவோ இருக்கலாம் என கூறப்படுகின்றது. இது உலகின் மிக நீளமான டைனோசர் பாதைகளில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஸ்டெபானி சலினாஸ் கார்சியா கூறியதாவது, “இங்கு நிலவும் வறண்ட வானிலை காரணமாக இந்த தடங்கள் தெரிகின்றன. கடந்த கோடையில் ஏற்பட்ட அதிக அளவிலான வறட்சியின் காரணமாக ஆற்றில் தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போனது. பூங்காவில் பல இடங்களில் டைனோசர் கால் தடங்கள் இருப்பதை காண முடிகின்றது. இங்கு மீண்டும் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் இந்த தடங்களை மறைந்து விடும். அதே நேரத்தில், 113 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் தடயங்களை இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் டைனோசர் பள்ளத்தாக்கு ஸ்டேட் பூங்கா தொடர்ந்து பாதுகாக்கும்” என்று   அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |