செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பழனிச்சாமி 2008-இல் இவர் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து அம்மாவால் நீக்கப்படுகிறார். நீக்கப்பட்டு, இவருக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பை அம்மா கோபமாக கொடுக்கிறார்கள்.
திண்டுக்கல் சீனிவாசன் ”மேடையில் இருப்பவர் செத்து போயிட்டார்” என்று சொல்வார், அவ்வளவு நல்ல மனிதன். ஒருநாள் ராஜன் செல்லப்பா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் பின்னாடி உட்கார்ந்து கொண்டு அண்ணே… அண்ணே… நான் உயிரோடு இருக்கிறேன் இங்குதான் இருக்கிறேன் என்று சொன்னார். அப்படிப்பட்ட மனிதர் அப்பப்போ என்னன்னு வருகிறதோ அதையெல்லாம் உளறுவார், அம்மா அதை சாப்பிட்டாங்க, இதை சாப்பிட்டாங்க, அதேபோல மன்னிச்சிடுங்க, மக்களுக்கு காலில் விழுகிறோம். தெரியாம சொல்லிட்டோம் என்று கேட்டவர்..
அவரையும் அம்மா பொறுப்பில் இருந்து எடுத்து விட்டு, அவை தலைவராக போட்டார்கள். அப்போது 2008இல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு போக வேண்டும் என்று இரண்டு பேரும் முடிவு செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனு போட்டீர்கள் ஆதரத்துடன் நான் கொண்டு வரட்டுமா? திமுகவிற்கு ஆதரவு கொடுப்போம் என்று என சரமாரியாக எடப்பாடியை புகழேந்தி விமர்சனம் செய்தார்.