Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு அரெஸ்டில் தப்பிக்க..! ஈபிஎஸ் போட்ட கணக்கு.. கொளுத்தி போட்ட புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, பொதுமக்களும் தொண்டர்களும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், அங்கே இருக்கின்ற நிர்வாகிகள் இடத்திலும், அவரை சார்ந்தவர்களிடத்திலும் நியாயம் கேட்கிறோம். வா என்று ஒற்றுமையாக அழைத்தால் வரமாட்டேன் என்று சொல்பவர் நல்ல மனிதரா ? சர்வாதிகாரப் போக்கு யாரிடம் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி இப்போது…

சசிகலா, டிடிவி என அனைவரும் சேர்த்து தான் அதிமுக என்று அன்னான் ஓபிஎஸ் பதில் சொல்லிவிட்டார். நானும் அங்கு இருந்தேன் அது அவருடைய கருத்து தான் பதில். எல்லோரும் ஒருங்கிணைத்துப் போவோம் என்பதுதான் எனது எண்ணம். இரண்டு காலில் தான் நடக்க முடியும், நாலு காலில் சென்று, கீழே விழுந்து தான் ஆட்சியை வாங்கினீர்கள். பிறகு சின்னமா வேண்டவே வேண்டாம் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

எல்லோரும் சேர்ந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும், இணைந்தால் தானே எதிர்க்க முடியும். அப்போது பிரிந்து நிற்கிறோம் என்றால் திராவிட முன்னேற்ற கழகம் இப்படித்தானே வெற்றி பெறும், அப்போ யாரு திமுகவிற்கு உதவியாக இருக்கிறார் ? இது போன்ற ஒரு ஆட்சியே கிடையாது, மிகவும் அமைதியான ஆட்சி.  அமைதியான சட்டமன்றத்தை இப்போதுதான் பார்க்கிறேன் என்று செங்கோட்டையன் அவர்கள் பேசினார்.

ஆர்பி உதயகுமார் மிகச்சிறந்த அரசு என்று  அவரும் பேசினர், உதயகுமார் சட்டம் ஒழுங்கை நிர்வாகிப்பதில் இது போன்ற அரசே  இல்லை என்று சொன்னார். படத்திறப்புக்கு நேரா வந்து உட்கார்ந்து கொண்டு, 20 நிமிஷம் பேசினீர்களே பழனிச்சாமி, ஆதரத்துடன் இருக்கு. கலைஞருடைய வரலாற்றை எல்லாம் சொன்னீர்களே.. இதெல்லாம் என்ன ? ரவீந்திரநாத் சென்று பார்த்து விட்டார்,  மிகவும் அசிங்கமாய் போய் விட்டதாம்.

யேய்..!அம்மாவே பார்த்தார்கள், அம்மாவே கூப்பிட்டு, மிஸ்டர்  ஸ்டாலின் பார்த்தார்கள், அவர்களே வரவேற்று பார்த்து பேசினார்கள். ஒரே ஒரு எம்.பி தானே இருக்கிறார்கள் தமிழ்நாட்டில், குறைகள் மற்றவைகளை முதலமைச்சரைப் பார்த்தால் என்ன தவறு? நீங்கள் திரை மறைவில் இருந்து கைதாகாமல் கொடநாடு வழக்கிலிருந்து, யார் யாருக்கு மனு போட்டு எந்தெந்த திமுககாரர்களுடன் உறவு வைத்திருக்கிறீர்கள் என்று வெளியே வரும், நாங்கள் விட மாட்டோம் என தெரிவித்தார்.

Categories

Tech |