Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே வாய் திறந்து பேசல..! நான் மட்டுமே இருப்பேன்… தன்னைத்தானே சொல்லிய எடப்பாடி… புட்டுப்புட்டு வைத்த AIADMK தலைகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கேள்வியாக கேட்க வேண்டாம். எந்த வார்த்தையும் கேட்க வேண்டாம். முதன் முதலில் தலைவர் சொன்ன வழி, ஒருவர் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால்,  கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அதை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று போடலாம் என எல்லாரு  ஒப்புதலின்படி சொன்னார்கள். அப்போது தேர்தல் அதிகாரி போட்டார்கள், அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து ஒரே மனுவை கொடுக்கிறார்கள்.

அன்றைக்கு உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் போட்டி போடுகிறோம் என்று சொல்லி இருந்தால் அன்றைக்கு தேர்தல் நடந்திருக்கும், அன்றைக்கு யாரும் போட்டி போடவில்லை. அதனால் அவுங்க இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்தாச்சு. இரட்டை தலைமையை எடப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

நான் மட்டும்தான் இருப்பேன் என்று கூறுகிறார், அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? கடைசி வரைக்கும் இரட்டை தலைமை என்று கூறியிருக்கிறோம், அதை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அண்ணா திமுக வழி நடத்துவதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுத்ததன் படி கட்சியை நடத்த வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.

இவர் தனி தலைமை, ஒற்றை தலைமை வேண்டும், அதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்கிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்று வாய் திறந்து சொல்லவில்லை, இவர் தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என விமர்சித்தார்.

Categories

Tech |