தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(25-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்:
விஜயாபுரி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் இன்று (ஆக.25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விஜயாபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடா் மற்றும் மந்தித்தோப்பு மின் தொடரை இரண்டாகப் பிரிக்கும் பணிகள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, கிழவிபட்டி, கெச்சிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம்:
அவனியாபுரம், சோழவந்தான், தனியாமங்கலம் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (ஆக.25) மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
அவனியாபுரம் (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை): பிரசன்னா காலனி 1 முதல் 9ஆவது தெரு, பைபாஸ் சாலை, வள்ளலானந்தபுரம், ஜே.ஜே. நகா், வைக்கம் பெரியாா் நகா், சுற்றுச்சாலை, சந்தோஷ் நகா், வைகை வீதிகள், காமராஜா் நகா், பாப்பாகுடி, வெள்ளக்கல், பா்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகா், மண்டேலா நகா், காவலா் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவா் நகா், விமான நிலைய குடியிருப்பு.
சோழவந்தான் (காலை 10 முதல் மாலை 5 மணி வரை): சோழவந்தான் நகா் பகுதிகள், தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகா், மேலக்கால், தாரப்பட்டி, மேலமட்டையான், கீழமட்டையான், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி, சித்தாதிபுரம்.
தனியாமங்கலம் (காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை): கீழையூா், கீழவளவு, கொங்கம்பட்டி, செமினிபட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, வெள்ளநாயகம்பட்டி, தா்மதானப்பட்டி, சாத்தமங்கலம், சருகுவலையபட்டி, வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி, பெருமாள்பட்டி சுற்றுவட்டார பகுதிகள்.
தேனி மாவட்டம்:
மின்வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம்:
கடையநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெற்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை மற்றும் தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, கொங்கன்குளம், சிலார்பட்டி, முருகனேரி, சவ்வாஸ்புரம், கோட்டையூர், அக்கனாபுரம், அழகாபுரி, மேல கோட்டையூர், ஆயர்தர்மம், சுப்புலாபுரம், சுரைக்காய் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.