தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே வெங்கடாசலம் மற்றும் அலாய் அருணா அலாய் ஸ்டில்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தற்போது பொது மக்களிடம் கருத்துக்கெட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவோ கருத்து கணிப்பு கூட்டம் நடத்தவோ கூடாது என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடம் காலியாக உள்ளது. அதை நிரப்பும் வரை ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என மின்வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.