தமிழகத்தில் ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பணி பதிவேடு உள்ளிட்டவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாட குறிப்பேடு பதிவுகளை மட்டும் பராமரித்தால் போதும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கட்டல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் விதமாக பள்ளி பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும். தேவையற்ற 11 பதிவேடுகளை நீக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
என்னும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் ஒன்னு முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்கள் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும். நான்கு முதல் 12 ஆம் வகுப்பு பாட ஆசிரியர்களும் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும் எனவும் பாடத்திட்டம் மற்றும் பணி பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.