Categories
சினிமா தமிழ் சினிமா

துளியும் உண்மையில்லை…. எனக்கே இது தெரியாது…. அரசியல் வதந்திக்கு திரிஷா முற்றுப்புள்ளி….!!!

திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் திரிஷா அரசியலில் நுழைவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு திரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |