Categories
தேசிய செய்திகள்

இனி சிரமமில்லை….! சமையல் சிலிண்டர் இனி இங்கே விற்க முடிவு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் 2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்னா என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் சிலிண்டர் இணைப்பு பெற ஆதார் கார்டு, முகவரி சான்று டெபாசிட் தொகை ஆகியவை செலுத்த வேண்டும் என்பதனால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகிறார்கள். அவர்களுடைய வசதிக்காக சோட்டு என்ற பெயரில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை காண்பித்து காஸ் ஏஜென்சிகளிடம் வழங்கி பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமின்றி இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னா என்ற பெயரில் 2 கிலோ சமையல் சிலிண்டர் இருக்கிறது. இந்த விவரம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்நிலையில் இந்திய ஆயில் நிறுவனம் 2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்களை அங்காடிகளில் விற்க முடிவு செய்துள்ளது. ‘முன்னா’ என்ற பெயரில் வரும் இந்த சிலிண்டர் புழக்கத்தில் இருந்தாலும் பலருக்கு தெரியவில்லை. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள அங்காடிகளில் இந்த சிலிண்டர் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கு ஒரு புகைப்படம், ஏதேனும் அடையாள அட்டைபோதும். ஆரம்பத்தில் 1971 செலுத்தி சொந்தமாக வாங்க வேண்டும். அதன்பின் மாதந்தோறும் நிர்ணயிக்கும் தொகை செலுத்தி பெறலாம்.

Categories

Tech |