விஜயகாந்த், தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார் விஜயகாந்த்.நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரேமலதா,விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.சமீபத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் நிற்க கூட முடியாமல் தடுமாறியதை பார்த்து அவரது தொண்டர்கள் கதறி அழுத வீடியோ வைரலான நிலையில் பிரேமலதாவின் இந்த கருத்து கவனிக்கத்தக்கது m