அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது.இந்த விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு இருவருக்குமே தலா ஒரு மணி நேரம் மட்டுமே வாதம் வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனால் இந்த ஒரு மணி நேர வாதம் இரு தரப்பினருக்குமே தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை நிரூபிக்க கொடுக்கப்படும். கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வரலாம் எனவும் கூறப்படுகிறது.