தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்தியா மேனனின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள தாய்க்கிழவி பாடலை வைத்து பலரும் நித்யா மேனனை தாய் கிழவி என அழைத்து வருகிறார்கள். எனவே இதனைத் தொடர்ந்து,ரசிகர்கள் யாரும் தாய் கிழவி என்று அழைக்க வேண்டாம் என்றும் தனக்கு அப்படி கூப்பிடுவது பிடிக்காது எனவும் நித்திய மேனன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.