உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் உக்ரைனின் சில கிராமங்கள் நாசமாகி கிடந்தது. இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி இதுவரை 19 தொகுப்புகளாக ரூ.84,721 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது.
இந்நிலையில் போருக்கு மத்தியில் உக்ரைன் நேற்று முன்தினம் தனது 31 வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதையொட்டி உக்ரைனுக்கு 2.8 பில்லியன் ராணுவ உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன் தினம் அறிவித்தார். இந்த ராணுவ உதவி வான்பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை உள்ளடக்கியது என்றும், இது உக்ரைன் நீண்ட காலத்துக்கு தன்னை தற்காத்து கொள்வதை உறுதி செய்யும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.