இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்அந்த இளைஞரை போலீசார் ஏப்ரலில் கைது செய்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தனது சொந்த விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாக சிறுமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜஸ்மீட் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுமியை கணவருடன் வாழ அனுமதித்தார். இஸ்லாமிய மதத்தின் முகமதியன் சட்டத்தின்படி, வயதுக்கு வந்த இஸ்லாமிய மத சிறுமி பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்துகொள்ளலாம். மேலும், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்றாலும் அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்தார். மேலும் சிறுமி உடல் ரீதியிலான உறவு கொண்டுள்ளனர். ஆகையால், இது பாலியல் தொல்லை வழக்கின் கீழ் வராது என தெரிவித்தார்.