Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கில் சிக்கி கொண்ட சப்னா சவுத்ரி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அரியானாவை சேர்ந்தவர் பிரபல பாடகி சப்னா சவுத்ரி. இவர் நடனகலைஞராகவும் இருந்து வருகிறார். சப்னா சவுத்ரிக்கு வடமாநிலங்களில் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். சப்னாவின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுக் கடங்காத கூட்டம் கூடுவது உண்டு. இதற்கிடையில் அவர் பாடல் ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். மேலும் சப்னா சவுத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் பிரபலமானார். இந்நிலையில் சப்னா மீது லக்னோ நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சப்னா முன்கூட்டியே பணம் வாங்கிவிட்டு அந்நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை நீதிமன்றம் விசாரித்து சப்னா சவுத்ரிக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் சப்னாவை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகிறார்கள். முன்பே சப்னா சவுத்ரி மீது ஒரு வணிக நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு மோசடி செய்துவிட்டதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்படி சப்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |