ஆசிரியர் அடித்ததில் பிரம்பு கன்னி பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதி.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் மகள் முத்தரசி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். முத்தரசியின் அருகில் இருந்த மாணவன் ஒருவன் சரியாக படிக்காத காரணத்தினால் ஆசிரியர் ஆதிநாராயணன் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு உடைந்து ஒரு பகுதி அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் பட்டு உள்ளது. இதனால் வலியால் அழுது துடித்து உள்ளார் முத்தரசி.
உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் முத்தரசியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவியின் கண்ணில் அடிபட்ட காரணத்தினால் மருத்துவமனையில் கண் மருத்துவமனைக்கு கூட்டி செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர் . தொடர்ந்து நெல்லையில் தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியின் கண்ணில் காயம் பட்டதைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு விசாரணையில் ஆசிரியர் ஆதிநாராயணன் மீது தவறு என தெரிந்து அவரை 3 குற்றப்பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்தனர்.