வீட்டில் கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை
புழலை அடுத்த புத்தகரம் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணி தொழிலதிபரான இவர் சென்னை அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் ஒரே மகன் லண்டனில் படித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு முத்து சுப்பிரமணியனின் மகன் சென்னை வந்துள்ளார் சென்னை வந்தது அடுத்த நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார் மித்ரா.
இந்நிலையில் வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் தனியாக இருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய மித்ரா வீட்டில் இருந்து கரும்புகை வெளியாவதை கண்டு அதிர்ச்சியடைந்து புழல் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்தீயை அனைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது முத்து சுப்பிரமணி உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார்.
பின்னர் வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.