தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். அனைத்து மாவட்டங்களும் சீராக வளர அரசு முயல்கிறது. 15மாத காலத்தில் நடத்திய முதலீட்டார்ளர்கள் மாநாடு மூலம் 220 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 3 லட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. 57,900 சிறு குறு நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன என்றார்.
மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு குறு நடுத்தர தொழில்களின் பங்கு அதிகம் இருக்கிறது.
சிறுகுறு நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருப்பூர். 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும் என்று பெருமிதமாக பேசினார்.