Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பில்கிஸ் பானு வழக்கு – நீதிமன்றம் அதிரடி ..!!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுதலை செய்த வழக்கில் மத்திய,  குஜராத் அரசுகள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாடு முழுவதுமே உற்று நோக்கக் கூடிய ஒரு வழக்காகத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது. பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு  சிறை விதிகளை பயன்படுத்தி, நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது.

இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் அபர்ணா பட், கபில் சிபில், மகுவா மொய்த்ரா ஆகியோர் வழக்கு தொடந்தனர். அதில் குற்றவாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களது விடுதலையை ரத்து செய்து,

அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க தற்பொழுது நோட்டீஸ் பிறப்பித்து இருக்கின்றார்கள்.

Categories

Tech |