செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தலைவராக தமிழ்நாட்டு சார்பாக சொல்கிறேன், நாளைக்கு இந்த கட்சி எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்து டெல்லியில் உட்கார வைத்தால் இந்தியா சார்பாக பேசுகிறேன். இன்றைக்கு எங்களுடைய அரசியல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக இருக்கிறது. இந்த நேரத்தில் ஆன்லைன் ரம்மியை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.
கொரோனா பேஸ் 2 லாக்டவுனில் தமிழ்நாடு அரசு இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் ஒத்துக்கவில்லை, அது எப்படி மாநிலத்தினுடைய அதிகாரத்தை நீங்கள் பறிப்பீர்கள் என்று கேட்டார் ? டிக் டாக் அனைத்துமே உங்களுக்கு தெரியும். சமுதாய பிரச்சனைக்காக தடை செய்யவில்லை, அது நேஷனல் செக்யூரிட்டிக்காக தடை செய்திருக்கிறோம். அது மத்திய அரசினுடைய பொறுப்பு. tiktok, சைனீஸ் ஆப், சைனீஸ் சம்பந்தப்பட்டதெல்லாம் அதையும் இதையும் கம்பேர் பண்ணாதீர்கள்.
அது அனைத்துமே நேஷனல் செக்யூரிட்டிக்காக கள்வான் பள்ளத்தாக்கு விஷயத்திற்கு பிறகு இந்தியா எடுத்து முடிவு. அதை நாம் தடை செய்திருக்கிறோம். இது சமுதாய பிரச்சனைகள், சமுதாய சீரழிவு, லிக்கரும் சேர்த்து. லிக்கருக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது, அதையும் நாம் சொல்கிறோம் தடை செய்யுங்கள் என்று…
இது எல்லாம் மாநில அரசினுடைய விவகாரம். அதனால் நீங்கள் டிக் டாக்கையும், ஆன்லைன் ரம்மி கம்பெனியும் ஒன்றாக கம்பேர் செய்ய வேண்டாம். மத்திய அரசு நேஷனல் செக்யூரிட்டி காரணங்களால் தடை செய்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தின் தலையாயப் பிரச்சினை ஆன்லைன் ரம்மி இருக்கு, இளைஞர்களை சீரழிக்கிறது, மத்த மாநிலத்தை விட நமக்கு மொபைல் ஊடுருவல் அதிகம், இன்டர்நெட் யூசர் அதிகம், சோசியல் மீடியா யூசர் அதிகம்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் பத்து வருடம் கழித்து தமிழ்நாட்டுடைய பிரச்சனை அவர்களுக்கு வரலாம், பீகாருக்கு இன்னும் பத்து வருடம் கழித்து வரலாம். ஏனென்றால் இன்னும் செல்போன் ஊடுருவல் இல்லை ,அர்பன் அந்த அளவிற்கு போகவில்லை. எல்லாருடைய கையிலும் செல்போன், எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு கிராமத்திற்கு போனாலும் இன்டர்நெட் இருக்கிறது. அப்போது ஆன்லைன் ரம்மி என்பது அடிக்சன் ஸ்டேஜ்க்கு போய் விட்டது. அது ஒரு கேம் என்பதை தாண்டி அடிமை ஆகிவிட்டார்கள் என தெரிவித்தார்.